#BREAKING : தமிழகத்தை உலுக்கிய சோகம்..! கெட்டுப்போன உணவு உண்டதால் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் வசித்து வந்த 11 பேருக்கு நேற்றிரவு உணவு அருந்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சங்கர் கணேஷ், 48, முருகம்மாள்,45, அம்பிகா,40, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருக்கலாம் அல்லது உணவு விஷத்தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான உணவுப் பாதுகாப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.