ம.பி.,யில் சோகம்..! லாரி- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி..!

சித்தி மாவட்டத்தில் இருந்து பஹ்ரியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல, மைஹாரை நோக்கி சரக்கு வாகனத்தில் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் லாரியும், சரக்கு வாகனமுமம் மோதிக்கொண்டன. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி., காயத்ரி திவாரி தெரிவித்துள்ளார்.