1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவில் சோகம்..! ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலி..!

1

கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பால தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
பலியான தொழிலாளர்கள் சேலம் மாவட்டத்தைச் சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரது உடல் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரயில் விபத்தில் பலியான 4 பேரும் ம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ரயில் வருவதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like