கோவையில் சோகம்..! வெள்ளியங்கிரி மலை கீழே இறங்கிய பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம்..!

வெள்ளியங்கிரி மலை தொடரை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3-வது மலையில் இறங்கி வந்த திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த சிவா (40) என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இவர் கடந்த 20 வருடங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பலசரக்கு பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று உறவினர்கள் நண்பர்களுடன் கோவை மாவட்டம் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் 7-வது கிரிமலை ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருதயத்தில் பிரச்சனை காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை (ஆஞ்சியோ) செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிவாவின் உடலை ஆலாந்துறை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இதய பிரச்சினை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் மலை ஏறக்கூடாது என்று தொடர்ந்து வனத்துறையினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.