சென்னையில் அரங்கேறிய சோகம்..! மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்!
சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி மற்றும் குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு 7 தையல் போடப்பட்டுள்ளது. குழந்தையின் கழுத்தியில் காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மாஞ்சா கயிறு அறுந்து, பாதிக்கப்படும் சம்பவம் இனிமேல் நடக்க கூடாது எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.