1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் அரங்கேறிய சோகம்..! எலக்ட்ரிக் பைக் விபத்து: 9 மாத குழந்தை பரிதாப பலி!

Q

சென்னையின் புறநகர் பகுதியான மதுரவாயல் அருகே பாக்கியலட்சுமி நகர் அன்னை இந்திரா காந்தி தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம் தனியார் நிறுவனம் ஒன்று அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்து வரும் நிலையில் தந்தை நடராஜ் தான் பயன்படுத்தி வந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு வழக்கம்போல நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் சார்ஜ் போட்டுவிட்டு முதல் தரத்திற்கு தூங்க சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிகாலை ஐந்து 15 மணியளவில் சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் வாகனத்திலிருந்து கரும்புகை கிளம்பியதாக கூறப்படுகிறது. இதை அறிந்து நடராஜன் மகன் கௌதம் முதல் தலத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து கௌதமின் மனைவி மஞ்சு மற்றும் அவர்களது ஒன்பது மாத கைக்குழந்தை வந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பற்றி எரிந்த பைக்கை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தீ வேகமாக பரவிய ஒன்பது மாத கைக்குழந்தையும் கௌதம் மற்றும் அவரது மனைவி ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து மூவரையும் மீட்ட நிலையில் படுகாயம் அடைந்த கைக்குழந்தை மற்றும் கௌதம் அவரது மனைவி மூவரையும் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து படுகாயம் அடைந்த கௌதம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது தீ விபத்தில் படுகாயம் அடைந்த ஒன்பது மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது

.

Trending News

Latest News

You May Like