செங்கல்பட்டில் சோகம்..! ரயில் மோதி மாற்றுத் திறனாளி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நடந்துச் சென்று பாதையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, சென்னை கடற்கரை சாலையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மோதியதில் மூன்று சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து, சிறுவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து தாம்பரம் ரயில்வே காவல்துறையினர், உயிரிழந்த ரவி, மஞ்சுநாத், சுரேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், சிறுவர்களின் பெற்றோர், ஊரப்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் ரயில் மோதிய உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், உயிரிழந்த சிறுவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்றும் கூறப்படுகிறது.