1. Home
  2. தமிழ்நாடு

சோகம்.. போதையில் டிரக் ஓட்டிய டிரைவர்.. தாய், இரட்டைக் குழந்தைகள் பலி..!

சோகம்.. போதையில் டிரக் ஓட்டிய டிரைவர்.. தாய், இரட்டைக் குழந்தைகள் பலி..!


கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரக் டிரைவர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரின் புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் என்பவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த டிரக் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
Karnataka: 3-yr-old twins, their mother killed after drunk driver hits bike  in Karnataka | The News Minute
டிரக் மோதியதில் 4 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய் ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தந்தை சிவானந்தன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய டிரக் டிரைவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like