குடிகார தந்தையால் சோகம்.. பெட்ரோல் ஊற்றி மகள் எரித்துக்கொலை.. மனைவி உள்பட 3 பேர் கவலைக்கிடம் !

குடிகார தந்தையால் சோகம்.. பெட்ரோல் ஊற்றி மகள் எரித்துக்கொலை.. மனைவி உள்பட 3 பேர் கவலைக்கிடம் !

குடிகார தந்தையால் சோகம்.. பெட்ரோல் ஊற்றி மகள் எரித்துக்கொலை.. மனைவி உள்பட 3 பேர் கவலைக்கிடம் !
X

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகழூர் பகுதியில் மருதமுத்து - தெய்வானை தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மோனிஷா (17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கணவன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் நிலையில், மருதமுத்து அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை 4 மணிக்கு மருதமுத்து மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவரின் மனைவி திவ்யா என்பவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் இருந்த மருதமுத்து கையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மனைவி - மகள் மீது பெட்ரோலை ஊற்றினார். அது திவ்யா மற்றும் அவரது மகள் மீது பட்டுள்ளது.

அப்போது திவ்யாவும், அவரது 3 வயது மகள் தனுஸ்ரீயும் வீட்டின் வராண்டாவில் இருந்துள்ளனர். வீட்டின் வராண்டாவில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் மருதமுத்து ஊற்றிய பெட்ரோல் அடுப்பின் மீது பட்டு அங்கும் தீப்பற்றியது.

இதில் திவ்யாவும், அவருடைய 3 வயது குழந்தை தனுஸ்ரீ, மருதமுத்துவின் மனைவி தெய்வானை, மகள் மோனிஷா ஆகிய 4 பேர் மீதும் தீப்பிடித்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே பெட்ரோலை ஊற்றிய தப்பியோட முயன்ற மருதமுத்துவை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை தனுஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

newstm.in

Next Story
Share it