பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி வீட்டில் நடந்த சோகம்..!
நடிகர் பங்கஜ் திரிபாதி குடும்பத்தில் நடந்த சோக சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்கஜ் திரிபாதியின் சகோதரி சரிதா திவாரி மற்றும் மைத்துனர் ராஜேஷ் திவாரி என்ற முன்னா திவாரி ஆகியோர் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.
பீகாரில் உள்ள கோபால்கஞ்சில் இருந்து மேற்குவங்க மாநிலம் சித்தரஞ்சனுக்கு சென்று கொண்டிருந்த போது, ஜார்கண்ட் மாநிலம் நிர்சா என்ற இடத்தில் இவர்களது கார் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் ராஜேஷ் உயிரிழந்த நிலையில், சரிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்