சோகம்! சிவகாசி வெடி விபத்தில் உயிரிழப்பு 5ஆக அதிகரிப்பு!!

சோகம்! சிவகாசி வெடி விபத்தில் உயிரிழப்பு 5ஆக அதிகரிப்பு!!

சோகம்! சிவகாசி வெடி விபத்தில் உயிரிழப்பு 5ஆக அதிகரிப்பு!!
X

சிவகாசி அருகே புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

சிவகாசி அருகே களத்தூரில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டது. அதில் 7 அறைகள் தரைமட்டமானது. விபத்து தொடர்பாக உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடுமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

crackers

8 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி (34) என்பவர் சிகிச்சை பலனின்றி ம உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it