1. Home
  2. தமிழ்நாடு

சோகம்! பிரபல கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்!!

சோகம்! பிரபல கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்!!


புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83.

நேற்று இரவு அவர் தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது உடல்நிலை மோசமடைந்து சுயநினைவு இழந்ததாக தெரிகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பண்டிட் பிர்ஜு மகராஜ் சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் “உன்னை காணாது நானும்…” பாடலுக்கு நடன அமைப்பு செய்து அதற்காக தேசிய விருது பெற்றவர். நடனம், பாடகர் என்று பன்முகத்திறமை கொண்ட இவர், கதக் நடனக் கலைஞர்களின் மஹாராஜ் குடும்பத்தின் வழித்தோன்றல்.

சோகம்! பிரபல கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்!!

பிர்ஜு மகாராஜ் தும்ரி, தாத்ரா, பஜன் மற்றும் கசல் ஆகியவற்றை பாடும் வல்லமை கொண்டவர். ஒரு தலைசிறந்த கதைசொல்லியான இவர், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் தனது நடிப்பை பின்னிப்பிணைத்து, பார்வையாளர்களைக் கவரும் வகையில் விவரித்தார்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால், அன்றாட நிகழ்வுகளைப் பற்றி எப்பொழுதும் ஏதாவது சொல்ல வேண்டும், தன்னைச் சுற்றியுள்ளவர்களை யதார்த்தமான சாயல்கள் மற்றும் தெளிவான விளக்கங்களுடன் மகிழ்வித்தார்.


நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் பெற்றவர். பண்டிட்ஜி அல்லது மஹாராஜ்ஜி என்று அவரது சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like