தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதைகள் திடீர் மாற்றம்..!
இந்தியாவில் ஆண்டுதோறும் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை பெறுவர் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 2023 ஆம் ஆண்டு தசரா திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 24ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை காண அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவர். இதனை கருத்தில் கொண்டு அக்டோபர் 22, 23, 24, 25 ஆகிய நான்கு நாட்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்வது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்து துறை மேலதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து விரைவில் மாற்று போக்குவரத்து பாதைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.