1. Home
  2. தமிழ்நாடு

நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

Q

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணிகளுக்காக மேற்கண்ட இடங்களில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி).
இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும். இதேபோல், அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்திலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, ஜி.என். செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையலாம். மற்றபிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like