கோவையில் போக்குவரத்து நெரிசலா..? உடனே இந்த நம்பருக்கு தெரிவிக்கவும்..!
தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோவை வருகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் (05.11.2024 & 06.11.2024) கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சீராக செல்ல தேவையான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரில் ஏதேனும் பகுதிகளில் போக்குவரத்து தொடர்பான சிரமங்கள் இருப்பின் பொதுமக்கள் அதை 81900 00100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அதை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.