கோவையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!
கோவையில் வருகின்ற 26.10.2024 ஆம் தேதி முதல் வாகனங்கள் கீழ்கண்ட சாலைகள் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பணக்கார வீதி வழியாக காந்திபுரம் அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி சுங்கம் புறவழிச் சாலையை அடைந்து வாலாங்குளம் கிளாசிக் டவர் சந்திப்பை அடைந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ஒப்பணக்கார வீதி வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கி செல்லும் கனரகம் மற்றும் இலகுரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி பேரூர் புறவழிச் சாலை வழியாக செல்வபுரம் ரவுண்டானா செல்வபுரம் மேல்நிலை சந்திப்பு வலது புறம் திரும்பி செட்டி மீது சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சலிவன் வீதி வழியாக காந்தி பார்க் அடைந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
கிராஸ் கட் சாலை வழியாக வட கோவை சிந்தாமணி ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக செல்லாமல் 100 அடி சாலை வடகோவை சிவானந்தா காலனி வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பார்க் கேட் எல்ஐசி அண்ணா சிலை லட்சுமி மில் வழியாக செல்ல வேண்டும். மேலும் அதே வழியாக திரும்பவும் வர வேண்டும் மேலும் நகருக்குள் வர அனுமதி இல்லை.
மேலும் கோவையில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதில் உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் கோவை மாநகராட்சியால் இலவசமாக தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜவீதி சோழக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி பார்க்கிங், பெரிய கடை வீதி ராயல் தியேட்டர் பார்க்கிங், என்எச் ரோடு ராஜா தியேட்டர் மற்றும் அதற்கு எதிரில் உள்ள போத்தீஸ் பார்க்கிங், கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ், கிராஸ் கட் ரோடு மாநகராட்சி பார்க்கிங் (இவை அனைத்தும் கட்டண முறை பார்க்கிங்)
மேலும் கிராஸ்கட் ரோடு எஸ் ஆர் ஜுவல்லரி எதிர்ப்புறம் உள்ள மார்ட்டின் மைதானம் வடகோவை மாநகராட்சி பள்ளி மைதானம் ஆகியவை தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்களாக அமைக்கப்பட்டுள்ளது (இலவச பார்க்கிங்).