1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்....முழு விவரம் இதோ!

1

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் நடைபெற்று வருவதினால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக மத்திய கைலாஷ் சந்திப்பில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதினால் ஒ எம் ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு குறைவே கிடையாது. தற்போது மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதனால் இனி அங்கு போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் பிப்ரவரி 3ஆம் தேதி வாலாஜா சாலை, அண்ணா சிலை மெரினா கடற்கரை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பேரணி நடத்த இருப்பதினால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி எட்டாம் தேதி அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு காலை அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது அதனால் போர் நினைவுச் சின்னம், ஏ பி ஆர் பாலம் செல்லும் வாகனங்கள் கொடிமரச் சாலை வழியாக திருப்பி விடப்படும் கலங்கரை விளக்கம்.

காமராஜர் சாலை வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றது. திருவல்லிக்கேணி, உழைப்பாளர் சிலை வரை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் அறிவித்துள்ளனர். அதன் பிறகு வலஜா வாகனங்கள் திருப்பப்பட்டு அண்ணா சாலை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை சார்பாக அறிவிப்புஅமைதி ஊர்வலம் வலஜாவில் வரும்போது அண்ணாசாலை, பெரியார் சிலை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றது. எனவும் போக்குவரத்து துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் இந்த தேதிகளில் வாகன ஓட்டிகள் தங்களது பயண திட்டத்திற்கு ஏற்ப வழித்தடத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like