1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: எங்கெங்கு தெரியுமா.?

1

ஆகஸ்ட் 8, 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் சுதந்திர தினவிழா கொண்டாட்ட ஒத்திகை நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

* உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

* காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா அண்ணாசாலை, மன்ரோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

* அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை அடையலாம்.

* ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிமுனை, வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like