1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் போக்குவரத்து மாற்றம்..!

1

குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 14.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

 

* சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.

* குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

 

இதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து அக்கரைக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. மாமல்லபுரத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, சென்னை நோக்கி வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பில் கேளம்பாக்கத்துக்கு திருப்பிவிடப்படும். விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், கேளம்பாக்கம், வண்டலூா், ஜிஎஸ்டி சாலை வழியாகச் செல்லலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ரேடியல் சாலை ஆகியவற்றில் மாலை 4 மணி முதல் இரவு 11.30 வரை, கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல சென்னை பெருநகர காவல் துறை, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் கிழக்கு கடற்கரையை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ராஜீவ் காந்தி சாலையைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக் கருதி குடியரசு துணைத் தலைவா் வாகனம் செல்லும் பகுதி, விமான நிலையம், ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

Trending News

Latest News

You May Like