ஒரே நாளில் சரிந்த வர்த்தகம்...முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பரி வரி விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார். அதிபர் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்று இந்தியப் பங்குச் சந்தை, 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் துவங்கியது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி கடந்த வார வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று (ஏப்ரல் 07) காலை 800 புள்ளிகளில் சரிந்து, 22,075 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.