1. Home
  2. தமிழ்நாடு

குற்றால அருவிகளை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

1

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வந்தது. இதில் தென்காசியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான மழை பொழிவு இருந்து வந்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், ஒரு வாரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றும் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு கணிசமாக குறைய தொடங்கியது. இதனால் கடந்த திங்கட்கிழமை ஜூன் 2ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

மேலும் கோடை விடுமுறையில் அருவிகள் மூடப்பட்டதால், தற்போது பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வார விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர். இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அருவிக்கு செல்லும் வழியில் கடை அமைத்துள்ள சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், பருவ மழைக்காலம் என்பதாலும், அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் முழு நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like