ஆழியார் அணை, டாப்ஸ்லிப்க்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல வனத்துறை நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை வதிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ஆழியார் அணை பூங்காவுக்கு செல்லவும் பொது பணி துறையினர் தடைவிதித்துள்ளனர். டாப்ஸ்லிப் மற்றும் ஆழியார் பூங்கா பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள் வாக்களிக்கும் வகையில் டாப்ஸ்லிப் மற்றும் ஆழியார் அணை பூங்கா நாளை ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாகவும் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.