1. Home
  2. தமிழ்நாடு

அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை..!

1

தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தற்போது நிலவி வரும் கனமழை எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்து தண்ணீர் வரத்து சீரான அடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஓரிரு நாளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு வார தடைக்கு பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். ஆனால் மீண்டும் மழை பெய்து, நீர் வரத்து அதிகரித்ததால் சில மணி நேரங்களில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்தைக் கண்காணித்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.

Trending News

Latest News

You May Like