சுற்றுலா பயணிகள் ஷாக்..! வெளிநாட்டு பயணியர் வருகையை குறைக்க நார்வேயில் கூடுதல் வரி..!

ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் நார்வேவுக்கு படை எடுக்கின்றனர்.இவர்களால் நாட்டின் இயற்கைச் சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. எனவே சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சுற்றுலா வரியை, அடுத்தாண்டு ஜூனில் அறிமுகப்படுத்த உள்ளனர். அதன்படி தங்குமிடங்கள், கப்பல் பயணங்கள், மற்றும் பிற சுற்றுலா சேவைகளை பயன்படுத்தும் போது, கட்டணத்துடன் சேர்த்து 3 சதவீத சுற்றுலா வரி வசூலிக்கப்படும்.
இந்த வரியால் கிடைக்கும் வருவாயை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கழிப்பறை போன்ற பொது சேவைகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.
இத்தாலி, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளின் பிரபல சுற்றுலா தலங்களில், ஏற்கனவே இது போன்ற வரி வசூலிப்பு நடைமுறையில் உள்ளது.