சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி... கேரளாவில் முதல் முறையாக கடல்வழி விமான சேவை..!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. பலரும் விடுமுறை நாள்களை கேரளாவில் சென்று கழிக்க விரும்புவார்கள்.
உள்நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பலரும் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகின்றனா். எனவே கேரள அரசு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அருவிகள், மலைப்பகுதிகளில் சுற்றுலா தலங்களாக காணப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில் அந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.
எங்கும் நிறைந்த பசுமை சுற்றுலா பணிகளை மகிழ்ச்சி அடைய செய்கிறது. கேரளாவில் மன அமைதியை ஏற்படுத்தும் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி அட்வென்சரஸ் கொண்ட சுற்றுலா பகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் கேரள அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் நீர்வழி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நீர்வழி விமான சேவை என்பதும், நீர் நிலைகளுக்கு இடையே நடத்தப்பட்டும் விமான போக்குவரத்து சேவை ஆகும். ஒரு நீர் நிலையில் இருந்து புறப்படும் விமானம் வானில் பறந்து மற்றொரு நீர்நிலையை சென்றடையும். இந்தியாவில் நீர்வழி விமான சேவை அண்மை காலமாக தொடங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் நீர்வழி விமான சேவை தொடங்கப்படுகிறது. விமான சேவைக்கு உகந்த பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுகிறது.
கேரளாவின் கோவலம், அஸ்டமுதி, புன்னமாடா, குமரகோம், வெம்பநாடு, மலப்புழா, பேக்கல் ஆகிய பகுதிகளில் நீர்வழி விமான மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்வழி விமான சேவையால் போக்குவரத்து நேரம் வெகுவாக குறைகிறது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சிறந்த பிரசாதமாக உள்ளது. இதன் மூலம் கேரள சுற்றுலா துறைக்கு வருவாய் அதிகாிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீர்வழி விமானங்களில் 9 பேர் முதல் 30 பேர் வரை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மட்டுமே இந்த விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக 1000 அடி முதல் 1,500 அடி உயரம் வரை இந்த விமானங்கள் பறந்து செல்லும். இதனால் பயணிகள் ஒரே சமயத்தில் நீர்நிலைகளின் அழகு மற்றும் வானில் இருந்தபடி இயற்கை அழகை கண்டு கழிக்கலாம். விரைவில் கேரளாவில் நீர்வழி விமான சேவை முழுவீச்சில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.