1. Home
  2. தமிழ்நாடு

கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகள் சேவை தற்காலிக நிறுத்தம்..!

Q

கன்னியாகுமரி, முக்கடல் சங்கமிக்கும் இடமாக உள்ளது.
நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
கன்னியாகுமரியில்
பகவதி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடலுக்கு நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, குமரி கடல் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என பல இடங்களை காண சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தைக் காணும் வகையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் சவாரி செய்வதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
 கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று காலை முதல் சுமார் 20 அடிக்கு கடல் உள்வாங்கியது. மேலும், கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தது. இதன் காரணமாக குமாரி சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like