உதகைக்கு சுற்றுலா வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது - டிரைவர் தப்பியோட்டம்..!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத நிலையில் தற்போது விட்டு விட்டு லேசான மழை பெய்தவருகிறது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்த கோவையை சேர்ந்த பிரபல சுற்றுலா வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்தபோது வளைவில் திடீரென நிலை தடுமாறி வண்டிச்சோலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்களை அவ்வழியாக வந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களும் மீட்டனர். காரில் வந்தவர்கள் சிறு காயங்களுடன்தப்பினர்.
இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் காரில் வந்தவர்கள் இறந்திருக்க கூடும் என்ற பயத்தால் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சாரல் மழை பெய்யும்போது ஆயில் மரங்களின் பசை சாலையில் படிந்திருக்கும். ஆகையால் வாகனங்களை ஓட்டுனர்கள் மெதுவாக இயக்க வேண்டுமென காவல்துறையினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது