1. Home
  2. தமிழ்நாடு

5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு கொலை?

Q

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஜெயக்குமாரை சுமார் 5 மணி நேரம் வரை அடித்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஜெயக்குமாரின் கை, கால்கள் கட்டப்பட்டும், கம்பியால் உடல் முழுவதும் சுற்றப பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது உடலில் கடப்பா கல், இரும்பு தகடு கட்டப்பட்டு உடல் எரிக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. உடல் கிடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் கடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like