போலீசாரின் தவறான குற்றச்சாட்டால் டாப் நடிகையின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது..!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். கடந்த 2002-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘Madkee’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் இரட்டை வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் எதிரொலியாக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத்.
முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்தியவர், அடுத்து ‘இக்பால்’ என்ற இந்தி படத்தில் நாயகியாக நடித்தார். ’டர்னா சரூரி ஹை’ என்ற பாலிவுட் படம் அடையாளம் கொடுத்தது. 2008-ம் ஆண்டு வெளியான ‘Kotha Bangaru Lokam’ திரைப்படம் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் இவரது முதல் படமே ரசிகர்களை கவர்ந்தது. ஏற்கனவே திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த காஜல், சமந்தா, த்ரிஷா மற்றும் ஸ்ரேயாவுக்கு டஃப் கொடுப்பார் என்று அப்போது பேசப்பட்டது.
அடுத்து தெலுங்கில் வெளியான ‘ரெய்டு’, ‘காஸ்கோ’ ஆகிய படங்களில் நடித்தவர் தமிழில் ‘ரா ரா’, ‘சந்தாமாமா’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் டாப் ஹீரோயினாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்காமல் போனது. காரணம் அவரது சில படங்கள் தோல்வியடைந்தன. அத்துடன் ஒரு சம்பவமும் நிகழ்ந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் சிக்கினார். காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் பாலியல் தொழில் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒற்றை குற்றச்சாட்டால் ஸ்வேதாவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஸ்வேதா பாசு, இவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டுகள் என நிராகரித்தார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, காவல்துறை ஸ்வேதா பாசுவை குற்றமற்றவர் என்று நிரூபித்தது. ஆனால் அந்தக் காயம் ஆறவில்லை. இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, ஸ்வேதா திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் மிட்டலை மணந்தார். ஆனால் திருமணமான 9 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி விவாகரத்து பெற்றது.
ஸ்வேதா பாசு கடைசியாக 2022 ஆம் ஆண்டு இந்தியா லாக்டவுன் படத்தில் நடித்தார். அதன் பிறகு, அவர் ஒரு முழுமையான OTT நட்சத்திரமாக மாறினார். தற்போது, ஸ்வேதா அடுத்தடுத்து ஓடிடி தொடர்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.