சூரியாவைப் போல உச்சநடிகர்களும் மாணவர்கள் பக்கம் நிற்பார்கள்- உதய நிதி ஸ்டாலின் !

நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், ‘கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்! #BanNEET_SaveTNStudents’ என்று பதிவிட்டுள்ளார்.