1. Home
  2. தமிழ்நாடு

சோம்பேறி இடத்தை பிடித்த டாப் 5 நாடுகள்..! இந்தியாவிற்கு கிடைத்த இடம்.?

1

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உலகில் அதிக சோம்பேறிகள் உள்ள நாடுகளை கண்டுபிடிக்கும் நோக்கில் அறிக்கையை மேற்கொண்டு வந்தது. அந்த ஆய்வு அறிக்கையில் சுமார் 46 நாடுகளில் உள்ள 7 லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு அறிக்கையை மேற்கொண்டதாக அந்த பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ஆய்வு அறிக்கையில் முதல் 5 இடத்தை பிடித்த நாடுகளின் பட்டியலையும் மற்றும் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது என்ற விவரத்தையும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சோம்பேறி இடத்தை பிடித்த டாப் 5 நாடுகள் :
முதல் இடம் இந்தோனேஷியா ,2 வது இடம் சௌதி அரேபியா , 3வது இடம் மலேசியா, 4 வது இடம் பிலிப்பைன்ஸ் , மற்றும் 5 வது இடம் தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் top 5 சோம்பேறி நாடுகள் என்ற பட்டியலில் இடங்களை பிடித்துள்ளது .

மேலும் இதில் இந்தியா 8 வது இடத்தை பிடித்துள்ளதாகவும் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4,297 அடிகள் மட்டுமே நடக்கின்றன என்றும் அவர்கள் அதிகமாக வாகனங்களையே பயன்படுத்துவதாகும் தெரிவித்துள்ளது.


அதோடு, ஆண்களை விட பெண்கள் குறைவாகவே நடப்பதும், இந்திய மக்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு குறைவாக நடப்பதே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like