+2 பொது தேர்வில் கடைசி 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்..!
இன்று வெளியான +2 பொது தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதமானது 91.32 சதவீதமாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவீதமாகவும், தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.
அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில்
- திருப்பூர் 97.45% முதலிடம்
- சிவகங்கை 97.42%,
- ஈரோடு 97.42%,
- அரியலூர் 97.25%,
- கோவை 96.97%,
- பெரம்பலூர் 96.44%
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 397 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
கடைசி 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்...திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது
- காஞ்சிபுரம் - 92.28%
- கிருஷ்ணகிரி - 91.87%
- திருவள்ளூர் - 91.32%
- நாகை - 91.19%
- திருவண்ணாமலை - 90.47%
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.