நாய்களை முதன்முறையாக வளர்க்க விரும்புவோருக்கு ஏற்ற சிறந்த 10 நாய்கள்..!
முதல் முதலாக நாய் வளர்க்க வேண்டும் என்று நினைப்போருக்கு சிறந்த 10 நாய்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன :
கோல்டன் ரெட்ரீவர்: லாப்ரடோர் ரெட்ரீவர் ரகத்தைபோலவே, கோல்டன் ரெட்ரீவர்களும் முதல் முறையாக நாய் வளர்க்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இவை அவற்றின் மென்மையான மற்றும் பாசமான இயல்புக்கு பெயர் பெற்றவை. வயதானவர்கள் அல்லது குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு ஏற்ற நாய் ஆகும். இவற்றின் நீண்ட ரோமங்களுக்கு வழக்கமான பராமரிப்பு தேவை. இவை அன்பான மற்றும் எளிமையான ஆளுமை கொண்டவை.
லாப்ரடோர் ரெட்ரீவர்: இந்த நாய்கள் புத்திசாலித்தனம், எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் நட்பாக பழகி கூடிய இயல்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவை. இவை அனைத்தும் முதல் முறையாக நாய் உரிமையாளராக மார் நினைப்போருக்கு ஏற்றதாக உள்ளன. மேலும் இவை குழந்தைகள் மற்றும் பிற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழகுகின்றன. லாப்ரடோர் ரெட்ரீவர் மிகவும் சுறுசுறுப்பானது, எனவே ஆரோக்கியமான உணவை தவிர அவை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இவற்றுக்கு தினசரி உடல் ரீதியிலான பயிற்சி தேவைப்படுகிறது.
கவாலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல்: இது ஒரு சிறிய ரக மற்றும் அதிகம் பாசமுள்ள நாய் இனமாகும். மேலும் இந்த நாய்கள் மனிதர்களிடத்தில் நட்பானவை, தகவமைப்புத் திறன் கொண்டவை மற்றும் குறைந்த பராமரிப்பு தேவை கொண்டவை. நம்முடைய தோழமை மற்றும் அரவணைப்பை மிகவும் விரும்ப கூடியவை. இவற்றின் மென்மையான குணம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற செல்லப்பிராணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. இவற்றின் இனிமையான, மகிழ்ச்சியை அளிக்கும் தன்மை முதன் முதலாக இவற்றை வளர்க்க சிறந்ந நாய் என்ற இடத்தில் வைக்கிறது.
பூடில்: முதன்முறை செல்லப்பிராணியாக நாய் வளர்க்க விரும்புதோருக்கு Poodle நாய்கள் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். காரணம் இவை புத்திசாலித்தனமானவை மற்றும் பல்துறை திறன் கொண்டவை. டாய், மினியேச்சர் மற்றும் ஸ்டாண்டர்ட் அளவுகளில் கிடைக்கிறது. இவை குறைந்தபட்ச முடி உதிர்தலை கொண்டிருப்பதால் ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு.
பிக்கான் ஃப்ரைஸ்: இந்த நாய் முதல் முறையாக நாய் வளர்க்க விரும்பும் உரிமையாளர்களுக்கு ஏற்ற மகிழ்ச்சியான மற்றும் பாசமுள்ள நாய் இனமாகும். இவற்றின் மென்மையான, ஹைபோஅலர்கெனி கோட் மற்றும் விளையாட்டுத்தனமான ஆளுமை போன்றவற்றுடன் சிறிய இடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கூட வளர்க்க ஏற்றவை. இவை பிற செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளுடன் நன்றாகப் பழக கூடியவை.
ஷிஹ் ட்ஸு (Shih Tzu): இவை அளவில் சிறிய, பாசம் அதிகமுள்ள நாய்கள் ஆகும். சிறிய இடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்க்க மிகவும் பொருத்தமானவை. இனிமையான இயல்பு மற்றும் எளிமையான சுபாவத்திற்கு இவை பெயர் பெற்றவை. உணவு மற்றும் பராமரிப்பு தவிர தினசரி சில நிமிட நடைப்பயிற்சி மற்றும் உட்புற விளையாட்டு இவற்றை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள போதுமானது.
பப்பிலோன்: இவை சுறுசுறுப்பானவை மற்றும் மிகவும் புத்திசாலித்தனமானவை. இவை பட்டாம்பூச்சி போன்ற காதுகளுக்கும், மகிழ்ச்சியான ஆளுமைக்கும் பெயர் பெற்றவை. இவற்றுக்கு பயிற்சியளிப்பது எளிது மற்றும் நம்மை மிகவும் மகிழ்விக்க கூடிய தன்மை கொண்டவை. மற்ற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழகும் தன்மை கொண்டவை நன்கு விளையாடும் பண்பை கொண்டிருப்பதோடு வெவ்வேறு சூழல்களுக்கு விரைவாக தன்னை தகவமைத்து கொள்கின்றது.
ரெஸ்க்யூ டாக் (டெசிஸ் - desis): நாய்களைப் பொறுத்தவரை, ரெஸ்க்யூ நாய்கள் அல்லது டெசிஸ், பொதுவாக கலப்பு இன நாய்கள். புறக்கணிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பிறகு புதிய நபர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுபவை. இவை இந்திய காலநிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்து கொள்பவை. இந்த நாய்கள் மனிதர்களுக்கு அற்புதமான தோழர்களாக உள்ளன. இவை உங்கள் இதயங்களையும் வீட்டையும் அன்பால் நிரப்புகின்றன.
பாஸ்டன் டெரியர்: இவை நட்பாக பழகி கூடிய சிறிய மற்றும் அழகான செல்ல நாய் இனங்கள். இவற்றின் டக்ஸீடோ போன்ற கோட்டிற்காக "அமெரிக்கன் ஜென்டில்மேன்" என்று அன்பாக அழைக்கப்படுகின்றன. இவை ஒப்பீட்டளவில் குறைந்த பராமரிப்பு கொண்டவை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வீடுகளில் சிரமமின்றி வளர்க்க ஏற்றவை.
ஹவானீஸ்: ஹவானீஸ் நாய்கள் அன்பானவை, இவை சிறியதாக இருந்தாலும் மகிழ்ச்சியான இயல்புடையதாக இருப்பதால், குடும்பங்கள், தனியே வசிப்பவர்கள் அல்லது முதியவர்களுக்கு - குறிப்பாக முதல் முறையாக செல்லப்பிராணி நாயை வைத்திருக்க விருப்புவோருக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த நாய்கள் புத்திசாலித்தனமாகவும் இருப்பதால், அவற்றைப் பயிற்றுவிப்பது எளிது.