நாளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் பிப்ரவர் 2-ம் தேதி அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜயின் அரசியல் வருகை அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாத களமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்று, தொகுதி வாரியான கட்சி உட்கட்டமைப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கட்சி நிர்வாகம் தமிழக அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் அறிக்கை வெளியிட்டு அழைப்பு விடுத்திருக்கிறது.
மேலும், அந்த அழைப்பில், தமிழக வெற்றி கழகம் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட பெயரில் "க்" என்ற எழுத்து சேர்க்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என்று வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay | @tvkvijayhq
— Bussy Anand (@BussyAnand) February 18, 2024
Thalaivar @actorvijay Sir.!@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/pkzAUkulLS
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay | @tvkvijayhq
— Bussy Anand (@BussyAnand) February 18, 2024
Thalaivar @actorvijay Sir.!@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/pkzAUkulLS