நாளை நடைபெற இருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைப்பு..!
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
அ.தி.மு.க. தலைமைக்கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், நாளை 9-ம் தேதி வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.