உ.பி முதல்வருடன் படம் பார்க்கும் ரஜினிகாந்த்- என்ன படம் தெரியுமா..??

நாளை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்லும் நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி அதித்யநாத்தை சந்தித்து அவருடன் ஜெயிலர் படம் பார்க்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெயிலர். ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்புப் பெற்றுள்ள இந்த படத்துக்கு பல முக்கிய பிரபலங்களும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த படம் கடந்த 10-ம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வது தேசியளவில் கவனம் பெற்றது.
தற்போது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த், அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நாளை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும் அவருடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழில் தயாரான ஜெயிலர் படம், பல்வேறு மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், இது எல்லாம் கடவுளின் ஆசீர்வாதத்தால் நடந்தது என்று கூறினார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷராஃப், மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.