1. Home
  2. தமிழ்நாடு

நாளை பௌர்ணமி..! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது ?

`

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இதில் கார்த்திகை தீப திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.  இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. 

அதன்படி பவுர்ணமி நாளை 1-ம்  தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like