1. Home
  2. தமிழ்நாடு

நாளை ஆடி பௌர்ணமி..! கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு..!

1

நடப்பாண்டிற்கான ஆடி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்தது.ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த சூழலில், ஆடி மாதத்தின் பௌர்ணமி நாளை ஜூலை 21ம் தேதி வருகிறது. பௌர்ணமி திதியானது 20ம் தேதியான இன்று மாலை 4.51 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், ஒரு நாளில் சூரியன் உதிக்கும்போது என்ன திதி உள்ளதோ அந்த திதியே அந்த நாள் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும்.

அந்த வகையில், 21ம் தேதி சூரியோதயத்தின்போது பெளர்ணமி திதி இருப்பதால் நாளை ஆடி மாத பெளர்ணமியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. பொதுவாக, பௌர்ணமி தினத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

ஆடி பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 5.20 மணி வரை கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் ஆகும்.

பொதுவாக, பௌர்ணமி நாட்கள் சிவபெருமான், பெருமாள், அம்பிகை, முருகன் ஆகியோருக்கு சிறப்புடையதாக கருதப்படுகிறது. அதேசமயம், ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் முழு முதற்கடவுள் என கூறப்படும் விநாயகரை வழிபடுவது சிறப்பானது என்று கூறப்படுகிறது.

ஆடி மாத பௌர்ணமியில் சிவபெருமானுடன், விநாயகரையும் சேர்த்து வழிபடுவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

Trending News

Latest News

You May Like