நாளை ஆயுத பூஜை..! பூஜை செய்ய சிறந்த நேரம் இது தான்..!
நவராத்திரி விழாவின் உச்ச நிகழ்வாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா. இந்த நாட்களை பலரும் விடுமுறைக்கான நாட்களாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால் நவராத்திரி வழிபாட்டின் முழு பலனையும் தரக் கூடிய நாட்கள் தான் இவை. நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் விரதம் இருந்து, அம்பிகையை அந்த அந்த நாளுக்குரிய முறையில் வழிபட முடியாதவர்களும் கூட கடைசி இந்த இரண்டு நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நலன்களையும் பெற முடியும். அப்படிப்பட்ட அற்புதமான, சக்தி வாய்ந்த நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி :
ஒவ்வொரு மாதமும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்திற்கு மறுநாளிலிருந்து தட்சணாயன காலத்தில் 9 நாட்கள் தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு பூஜிக்க மிகசிறந்த காலமாகும்.
மகிஷாசுர வதம்:
பலம் பொருந்திய தன்னை ஒரு ஆண் மகன் கொல்வே முடியாது, அதனால் ஒரு பெண் தன்னை எப்படி கொல்ல முடியும் என நினைத்த மகிஷாசுரன், தன்னை 9 நாட்கள் விரதமிருந்து வலுவில்லாமல் இருக்கும் ஒரு பெண் தான் தன்னை கொல்ல முடிய வேண்டும் என்ற வரத்தை வாங்கினான் மகிஷாசுரன்.
வரத்தை பெற்ற அரக்கன் மண்ணுலகையும், விண்ணுலகையும் தன் கொடுமைகளாலும், அசுர படைகளாலும் அடிமைப்படுத்தினான்.மிகிஷனை கொல்வது ஒரு சாதாரண பெண்ணால் முடியாது என்பதால், முப்பெரும் தேவியர்கள் ஒன்றாக சேர்ந்து இச்சை - விருப்பம், ஞானம்- அறிவு, கிரியா - செய்தல், ஆக்கல் எனும் சக்திகளாக அதாவது இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்தி இணைந்து துர்க்கை அம்மனாக விரதமிருந்து, மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போரிட்டார்.
விஜய தசமி
ஒன்பதாம் நாளான நவமி திதியில் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும். பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி மட்டுமில்லாமல், ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்டவையும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.
நாளைய தினம் காலை 6.00 மணியிலிருந்து 7.30 வரை நல்ல நேரம். அப்படி அந்த நேரத்தை தவறவிட்டவர்கள் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த நேரமும் ஆயுத பூஜை வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள் மதியம் 12.00 மணியிலிருந்து 1:30 மணி வரை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நாளை மாலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உங்களுடைய வீட்டில் வழிபாடு செய்யலாம்.
நாளை பூஜையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன
நாளைய தினம் கட்டாயமாக குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகத்தை பூஜையறையில் வைப்போம். அது நாம் எல்லோருக்கும் தெரியும். அது தவிர வீட்டில் நீங்கள் படிக்கும் ஆன்மீகம் சார்ந்த மற்ற புத்தகங்கள் ஏதாவது இருந்தால் அந்த புத்தகத்தையும் நாளை பூஜை அறையில் வைக்கலாம். ராமாயணம், மகாபாரதம் அல்லது திருக்குறள் புத்தகம் இப்படி மற்ற புத்தகங்களையும் பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. இது தவிர சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி, அருவா, கொடுவா, அருவாமனை, கத்தி, கத்திரிக்கோல், போன்ற பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். சில பேர் சில பொருட்களை பயன்படுத்தாமல் பரண்மேல் வைத்திருப்பார்கள். தாத்தா பாட்டி பயன்படுத்திய சாதனங்கள். பெரிய கொடுவா, பெரிய கத்தி, அருவாமனை, எல்லாம்.
அதையெல்லாம் எடுத்து நாளை சுத்தம் செய்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப. இதோடு சேர்த்து அரிசி அளப்பதற்கு பயன்படுத்தும் படி, அரைப்படி, ஆழாக்கு என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த பொருட்களையும் பூஜையில் வைக்க வேண்டும். குறிப்பாக உங்க வீட்டில் சின்னதாக உரல், அம்மிக்கல், ஆட்டுக்கல் ஏதாவது மிகச்சிறிய அளவில் வைத்திருந்தீர்கள் என்றால் அதை சுத்தம் செய்தும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். எல்லா பொருட்களையும் மொத்தமாக காலியாக வைக்க வேண்டாம். படி, அரைப்படி, அஞ்சறைப் பட்டியில் ஒரு சில சின்ன சின்ன தானியங்களை அரிசி பருப்பை உள்ளே போட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.