1. Home
  2. தமிழ்நாடு

இன்றைய தக்காளி விலை இதுதான்- மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

tomato price
தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ தக்காளி ரூ. 20 குறைந்து ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழைப்பொழிவு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுவதும் கிலோ தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. சில பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 210-க்கு விற்பனையாகும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

கடந்த செவ்வாய்க் கிழமை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ. 180-க்கு விற்பனையானது. ஆனால் மாநிலத்தில் தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் படிப்படியாக விலை குறைந்தது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 150-க்கு விற்பனையானது. சில்லறை விற்பனையில் கிலோ தக்காளி ரூ. 180-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ தக்காளி ரூ. 20 குறைந்து ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், விலை படிப்படியாக குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

சென்னை கோயம்பேடு சந்தையில் முதல் ரக தக்காளி ரூ. 120-க்கும், இரண்டாம் ரக தக்காளி ரூ. 80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து 550 டன் தக்காளி வந்துள்ளதால் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Trending News

Latest News

You May Like