1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை..! மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தது!!

1

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.110 க்கு விற்பனையான தக்காளியின் விலை இன்று மேலும் ரூ.20 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை ஆகிறது. இந்த தக்காளியின் விலை கடந்த ஒரு சில வாரங்களாகவே ரூ.100 க்கு அதிகமாகவே விற்கப்படுவதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் போதிய விளைச்சல் இல்லாததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேஷன் கடை மற்றும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்து வருகிறது.

தக்காளியின் விலையை போலவே இஞ்சி, சின்ன வெங்காயம் போன்றவைகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று இஞ்சி ஒரு கிலோ ரூ.260 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்து ஒரு கிலோ ரூ.220 க்கு விற்பனை செய்யபப்டுகிறது. மேலும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், பூண்டு விலை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like