பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!
கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பரவலாக பெய்து வந்தது.
பல்வேறு இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்து வரும் நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன. மழையை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை தொடர்பான எந்த ஒரு புகாரையும் 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே போல் நாகையில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
1077,
04365 251992,
8438669800 (வாட்ஸ்ஆப்)
9487550811 (செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான எண்) ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 மற்றும் இலவச உதவி எண் 1913, வாட்ஸ் அப் எண் 9445477205 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி. சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
04368-228801 04368-227704 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என, அம்மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது!