1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்..!

1

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 566 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 55 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும்,  ஏப்ரல் 1-ம் தேதி மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவிகிதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நேற்று நள்ளிரவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 55 சுங்கக்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. 

அதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புத்தூர்,

பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like