இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ...
கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,440-க்கு விற்பனையானது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,465-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி 89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.