1. Home
  2. தமிழ்நாடு

இன்று பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை..!

1

தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று  (27-ந் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like