இன்று 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும்...3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைய தினம் புயலாக மாறவுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரக்கூடும்.
வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும். என மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பள்ளிகள் மட்டும் விடுமுறை
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை
- திருவள்ளூர்
- விழுப்புரம்
- கடலூர்
- நாகை
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுச்சேரி
- காரைக்கால்
கடலூர் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.அதேபோல் கடலூர் அரசு கலை கல்லூரியில் நாளை நடைபெற இருந்த கூட்டுற சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடக்கும் என்று கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாள விநாயகன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.