1. Home
  2. தமிழ்நாடு

இன்றைக்கு நம் இந்தியாவுக்கு 5 ரூபாய் மருத்துவர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள் - அண்ணாமலை..!

1

காஞ்சிபுரத்தில் உள்ள பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

மாணவர்களே.. உங்களை நீங்களே சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நாளை நம் பாரதம் எப்படி இருக்கப் போகிறது என்பதே உங்கள் கையில் தான் இருக்கிறது. அது மிகப்பெரிய பொறுப்பு. அந்த பொறுப்புக்கு நீங்கள் வர வேண்டும் என்றால் கல்வி முக்கியம். கல்வி என்றால் சாதாரண கல்வி இல்லை. எதையோ படிச்சோம். ஏதோ மார்க் வாங்குனோம். எந்த வேலைக்கோ போனோம் என்று இருக்க் கூடாது. அந்த கல்வி நம்ம இந்தியாவுக்கு தேவையில்லை.

ஆழமான, தீர்க்கமான, நுணுக்கமான, முழுமையான, சமுதாயத்துக்கு பயன்படும் விதமான கல்வி தான் உங்களுக்கு தேவை. அதனால் வெறும் கல்வி மட்டும் இப்போது போதாது. அந்தக் கல்வி நம் கலாச்சாரத்தோடு இருக்க வேண்டும். அந்தக் கல்வி மனிதத் தன்மையோடு கலந்திருக்க வேண்டும். அந்தக் கல்வி ஒரு ஏழை மனிதனின் கண்ணீரை துடைப்பதாக இருக்க வேண்டும். அந்த மனிதனுக்கு எப்படி நம்மால் உதவ முடியும் என்பதற்கு விடையளிக்கும் விதமாக அந்தக் கல்வி இருக்க வேண்டும். ஏழை என்கிற ஜாதியே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கும் கல்வியாக அது இருக்க வேண்டும்.

உங்களை நான் 100-க்கு 100 மார்க் எடுங்கள் என்று சொல்லவில்லை. 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து மோசமான மனிதத்தன்மையற்ற மருத்துவராக இருப்பதை விட, 100-க்கு 80 மார்க் எடுத்தாலும் மனிதநேயத்துடன் கூடிய மருத்துவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். 5 ரூபாய்க்கு கூட மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மருத்துவராக நீங்கள் இருக்க வேண்டும். இன்றைக்கு நம் இந்தியாவுக்கு 5 ரூபாய் மருத்துவர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். மனிதத் தன்மையும், அடுத்தவர்களுக்கு உதவும் குணமும் தான் நீங்கள் கற்ற கல்விக்கு கிடைக்கும் வெற்றி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Trending News

Latest News

You May Like