இன்று காதலர் தினம்... அழகா ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு தான்!

காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் துணையுடன் அவுட்டிங் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? அப்போது நீங்கள் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா? ஆனால் உங்களால் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகை மெருகேற்றும் அளவில் நேரம் இல்லையா? அப்படியானால் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களைக் கொண்டு, இப்போதிருந்தே ஃபேஸ் பேக் போட்டு வாருங்கள்.
அதுவும் சருமத்தில் நல்ல மாயத்தை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்ட ஒரு அற்புதமான பொருள் தான் காய்ச்சாத பச்சை பால். இந்தப் பாலில் உள்ள வைட்டமின்கள், புரோட்டீன்கள், லாக்டிக் அமிலம் போன்றவை சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளைத் திறம்பட வெளியேற்றி, சருமத்தின் பொலிவை மேம்படுத்துவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட பாலைக் கொண்டு பல ஃபேஸ் பேக்குகளைப் போடலாம்.
1. மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்த கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
2. தேன் மற்றும் பால் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறு வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வறண்ட சருமத்தினருக்கு ஏற்றது. இதை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சரும வறட்சி கட்டுப்படுவதோடு, சருமம் பளிச்சென்று மின்னும்.
3. ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.
4. கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
5. பப்பாளி மற்றும் பால் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மசித்த பப்பாளி கூழை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துப் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.