1. Home
  2. தமிழ்நாடு

இன்று வைகாசி பௌர்ணமி : இன்று கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும்..!

1

வைகாசி மாதம் முருகன் அவதரித்த தினமாதலால் முருகபெருமானுக்கு உகந்த நாளாக உள்ளது. இந்த வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் நாளில் வரும் வைகாசி விசாகத்தின்போது முருக பெருமானை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் குறைகள் நீங்கி மகிழ்ச்சி செழிக்கும்.

அதேபோல வைகாசி மாத பௌர்ணமி நாள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை, பௌர்ணமி வரும் நிலையில் வைகாசியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பௌர்ணமி நடக்கும். இந்த 2024ம் ஆண்டில் வைகாசி பௌர்ணமி  மே 23ம் தேதி வருகிறது. மே 22ம் தேதி புதன்கிழமை இரவு 07.16 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 07.51 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. ஆனாலும் மே 23 ம் தேதி காலை 09.43 மணியுடன் விசாகம் நட்சத்திரம் நிறைவடைந்து விடுகிறது.இதனால் வைகாசி விசாகம் இந்த ஆண்டு மே 22ம் தேதியும், பெளர்ணமி மே 23ம் தேதியும் வருகிறது. திருவண்ணாமலையில் வைகாசி பெளர்ணமி கிரிவலம் செல்பவர்கள் மே 22 ம் தேதி இரவு 07.15 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி இரவு 8 மணி வரை கிரிவலம் செல்லலாம்.

இந்த பௌர்ணமி நாட்களில் அதிகாலை எழுந்து குளித்து விரதம் இருந்து இஷ்ட தெய்வங்களை வழிபடுவது தெய்வங்களின் பரிபூரண ஆசியை கிடைக்க செய்கிறது. வைகாசி பௌர்ணமியில் சந்திர தரிசனம் சிறப்பு வாய்ந்தது.

வைகாசி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோவில்களில் உள்ள தெய்வங்களை வழிபட்டு கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும். 

Trending News

Latest News

You May Like