இன்று வைகாசி பெளர்ணமி : எப்படி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா ?

வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில் வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
* வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.
* வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
* கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே.
* வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசி.
* காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமியே. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி.
* வைகாசி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்ம ராகக் கற்களாலான மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
* வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம், "ரிஷப விரதம்' ஆகும்.
* வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமி வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். சந்திரனின் முழு ஆற்றலும், பிரபஞ்சத்தின் நேர்மறை சக்திகளும் பூமியில் பரவி இருக்கும் நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் பூஜைகள், வழிபாடுகள், மந்திர ஜபம் ஆகியவை 10 மடங்கு அதிக பலனை தரும். பெளர்ணமி தினம் என்பது அம்பிகை, சிவன், குல தெய்வம், முருகன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பெளர்ணமி நாளில் சத்ய நாராயண பூஜை செய்வதால் வீட்டில் இருக்கும் வறுமை நிலை மாறி, செல்வ வளம் பெருகும். ஒவ்வொரு மாத பெளர்ணமி வழிபாடும் சிவன் மற்றும் முருகப் பெருமானுடன் தொடர்புடைய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முறையாக வழிபட்டால் எந்த தெய்வத்திடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு நட்சத்திரம் அல்லது அந்த தமிழ் மாதத்துடனேயே சேர்த்து சிறப்பித்து சொல்லப்படும். அப்படி வைகாசி மாத பெளர்ணமி என்பது எப்போதும் விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்தே வரும். இதை ஜேஷ்ட பெளர்ணமி என்றும் சொல்வது உண்டு. அதே போல் வைகாசி பெளர்ணமி மட்டும் இரண்டு நாட்கள் இருப்பதாக அமையும். வைகாசி பெளர்ணமியுடன் இணைந்த விசாகம் நட்சத்திரத்தில் தான் முருகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்வதால் இதை வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். வைகாசி பெளர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் திருமண பாக்கியம் கிடைக்கும். வீட்டில் அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். துன்பங்கள் அனைத்தும் விலகும்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு நட்சத்திரம் அல்லது அந்த தமிழ் மாதத்துடனேயே சேர்த்து சிறப்பித்து சொல்லப்படும். அப்படி வைகாசி மாத பெளர்ணமி என்பது எப்போதும் விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்தே வரும். இதை ஜேஷ்ட பெளர்ணமி என்றும் சொல்வது உண்டு. அதே போல் வைகாசி பெளர்ணமி மட்டும் இரண்டு நாட்கள் இருப்பதாக அமையும். வைகாசி பெளர்ணமியுடன் இணைந்த விசாகம் நட்சத்திரத்தில் தான் முருகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்வதால் இதை வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். வைகாசி பெளர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் திருமண பாக்கியம் கிடைக்கும். வீட்டில் அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். துன்பங்கள் அனைத்தும் விலகும்.
செவ்வாய் கிழமையில் வரும் பெளர்ணமி நாளில் துர்கை அம்மனை சிவப்பு நிற வஸ்திரம் மற்றும் செவ்வரளி சாற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள், மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நாளில் துர்கை அம்மனை வழிபட்டால் சகல செல்வ வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். செவ்வாய்கிழமை முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுவதால் திருமண தடை உள்ளவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் விரும்பி வரன் அமையும்.
பெளர்ணமியில் எப்படி வழிபட்டால் என்ன பலன்?
- வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியில் சந்தனம் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சகல துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். - பௌர்ணமியில் சிவாலயங்களுக்கு சென்று விளக்கேற்ற வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
- முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் அனைத்து துன்பங்களும் விலகி, தன, தானிய, செல்வ வளம் உண்டாகும்.
- சிவ பெருமானின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும்.
- பௌர்ணமி நாளில் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற, குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிட்டும். அத்துடன் நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள்.
- பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது, மலைக்கோவில்களில் இருக்கும் தெய்வங்களை வழிபடுவது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதுடன் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும்.
- பெளர்ணமியில் சந்திர பகவானின் அருளை பெற பச்சரிசி, தயிர் சாதம் போன்றவற்றை தானமாக கொடுப்பது சிறப்பு.